7 வயது சிறுவன் ஒருனை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கும் சந்தேகநபரான ஹொரண நீலகவிற்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் நீலக்க என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.