நாட்டின் நிதி நிலைமையினை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த பொது சேவைகளும் பாதிக்காத வகையில் தாதியரின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தாதியர்களுக்கான பல்கலைக்கழகம் நிறுவுதல், பதவி உயர்வு, பணி நேரம் குறைத்தல், போக்குவரத்து கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு மற்றும் மேலதிக சேவை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகின்றன.