தொழிற்சங்க போராட்டத்தினூடாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது, அதனால் மக்களே பெருமளவு பாதிப்படைகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கென தனியான சங்கமொன்று இதுவரையில் உருவாகவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கமொன்றை உருவாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கமொன்றை உருவாக்கி அதனூடாக, தடிகளை மக்கள் கைக்கு எடுக்க வேண்டும். மக்கள் தடிகளால் தாக்கினாலும் சிக்கல் இல்லை. கல்லால் தாக்கினாலும் சிக்கல் இல்லை. எதாக இருந்தாலும் அதற்கு ஆதரவை வழங்க தயாராகவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.