கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கக்பெற்ற தகவலொன்றுக்கு அமைய, நேற்று இரவு சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு -12, ப்ரின்ஸ் கேட் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், வரி செலுத்தாது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 9,400 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 63,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர், கொழும்பு 12 ஐ சேர்ந்த 49 வயதான ஒருவரென விசாரணைகளை முன்னெடுத்து வரும் வாழைத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்தனர்.