follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுவெளிநாடுகளிலிருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள்

வெளிநாடுகளிலிருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள்

Published on

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டசோதனையின்போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் தனியார் பொதிச் சேவையினூடாக கொண்டுவரப்பட்ட பொதிகளுக்குள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு குறித்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் போலியானவை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...