இலங்கையில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரு கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் கூட அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் மூன்று கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒரு தொற்றாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். எனினும் இவர் நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராவார் என தெரிவித்துள்ளார்.