பேராதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில், பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் குறித்த வைத்தியசாலையிலுள்ள உணவக உரிமையாளரிடம் 5000 இலஞ்சம் பெற்ற குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பொது சுகாதார பரிசோதகர் வைத்தியசாலையின் உணவகத்தை நடத்தி வரும் உரிமையாளரிடம் இவ்வாறு இடைக்கிடையில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்படும் என்று குறித்த நபரினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கைது செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.