கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 2021.08.12 ஆம் திகதி முதல் 2021.08.31 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு 2021.09.30 ஆம் திகதி வரையில் எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
தேவைப்பட்டால் www.motortraffice.wp.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.