அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கு லங்கா சதொச ஊடாக மொத்த விலையில் தண்ணீர் போத்தல்களை வழங்கும் போது விசேட சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர், பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறைக்கமைய தண்ணீர் போத்தல் ஒன்றுக்கென நிறுவனத்தால் 18.22 வீதம் சலுகை வழங்கப்படும் எனவும் தண்ணீர் போத்தல் ஒன்றின் பெறுமதி 29 ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை பயன்படுத்தி மீள கையளிக்கும்பட்சத்தில், 10 ரூபா மீள செலுத்தப்படும். இந்நிலையில் தண்ணீர் போத்தலுக்கென 19 ரூபாவை மாத்திரமே செலவிட வேண்டி வருமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பாவனைக்கு பின்னரான வெற்று தண்ணீர் போத்தல்களை சதொச கிளைகளில் ஒப்படைக்கும்போது, பாவனையாளர்களுக்கு 10 ரூபா மீள கையளிக்கப்படுமென போத்தலிலுள்ள லேபளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 25 ரூபா மாத்திரமே பாவனையாளர்கள் தண்ணீர் போத்தலுக்கென செலவிட வேண்டி வரும். 10 ரூபா சலுகை வழங்கப்படுகிறது. சூழலுக்கு இணைவான தேசிய வேலைத்திட்டமாக சதொச நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.