மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படுவதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
மருத்துவ பரிசோதனைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்டவர்கள் பல்வேறு நபர்களால் வெளியிடப்படும் தவறான கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல், மூன்றாவது அளவினை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ பொது மக்களை கேட்டுக்கொண்டார்.