கிழக்கு, வட மத்திய ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேநேரம் நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை வேளையில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைபெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.