follow the truth

follow the truth

November, 27, 2024
Homeஉள்நாடுபெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Published on

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, பெப்ரவரி முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 31,343 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, பெப்ரவரி மாதத்திற்கான வருகை விகிதம் நாளாந்தம் 3,134 ஆகக் காணப்படுவதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவில் இருந்தே 4,566 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், 3,799 பயணிகளின் வருகையுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் 3,575 பயணிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் – காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை- காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம்...

களனி மற்றும் கலா ஓயாவை சுற்றி வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கை மற்றும் கலா ஓயா பள்ளத்தாக்கு பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலா...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி – மாயமான 8 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்கிறது

அம்பாறை - காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் கலப்பை அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 6 சிறுவர்கள்...