கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை தொடர்பான புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாட்களுக்குமான பரீட்சை நேர அட்டவணையை தெளிவூட்டும் வகையில், இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை தொடர்பான அதிகாரிகள், இந்த அறிவுறுத்தல்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.