15 ஆவது ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது.
இந்த ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஏலப்பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
வீரர்களின் அடிப்படை விலை ரூபா 2 கோடி, ரூபா 1½ கோடி, ரூபா ஒரு கோடி, 75 இலட்சம், 50 இலட்சம், 40 இலட்சம், 30 இலட்சம், 20 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச அடிப்படை விலையான ரூபா 2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள 10 அணிகளும் தங்கள் அணியை ஒரு வலுவான அணியாக கட்டமைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்.