நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் மரணங்கள் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா நோய் அறிகுறிகள் தென்படாத பெருந்திரளானோர் சமுகத்தில் உள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிகாட்டுகின்றது.
மரண எண்ணிக்கையை நோக்கும்போது நோய் அறிகுறிகள் தென்படாத பெரும்பாலானோர் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவுவதுடன், பெரும்பாலானோருக்கு ஒமிக்ரோன் தொற்று இருந்தும் கூட அறிகுறிகள் தென்படாதுள்ளன. இவ்வாறானவர்கள் கூடுதலாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு நோய் அறிகுறிகள் தென்படாதவர்களினால் ஒமிக்ரோன் பரவுவதன் மூலம் தொடர்பை பேணியவர்கள் அவதான நிலையில் காணப்பட்டால் மரணத்தை கூட தழுவலாம். சமுகத்தில் நோய் அறிகுறிகள் தென்படாதவர்கள் கூடுதலாக உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.