நாட்டில் தற்போது எவ்வித தொற்று அறிகுறிகளும் அற்ற , உடலில் மிகக் குறைவான வைரஸ் காணப்படும் தொற்றாளர்களே பெருமளவில் உள்ளனர்.
எனவே தான் கொவிட் தொற்றுக்குள்ளானோருக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும் தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றிருப்பார்களாயின் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.