follow the truth

follow the truth

January, 5, 2025
Homeஉள்நாடுநாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது : அம்பிகாவின் கருத்து புலிகளின் செயற்பாடுகளை பிரதிபலிக்கின்றன...

நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது : அம்பிகாவின் கருத்து புலிகளின் செயற்பாடுகளை பிரதிபலிக்கின்றன – வெளிவிவகார அமைச்சு

Published on

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன் தெரிவித்த கருத்து தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எனவே, அவரது குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், ஏற்கனவே கொரோனா தொற்றினால் அனைவரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சலுகையை இலங்கை இழந்தால், அதனால் பல இழப்புக்கள் ஏற்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை வழங்கி வருகின்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை நினைவூட்டுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்தோடு சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் வசம் இருந்த தனியார் காணிகளில் 92 வீதத்திற்கும் அதிகமானவை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவற்றை கையளிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

கொழும்பு அவிசாவளை வீதியின் போக்குவரத்து இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் விடுத்துள்ளனர். ஹங்வெல்ல பொலிஸ்...

88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து நேற்று(03) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 88,000 மெற்றிக் தொன்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஜனவரி 08 ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...