follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாழ்த்து செய்தி

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாழ்த்து செய்தி

Published on

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளங்கன் இலங்கை மக்களும், அரசாங்கத்துக்கும் அமெரிக்கா சார்பில் தனது சுதந்திர தினவாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இலங்கையும் நட்புறவு மற்றும் பங்காளித்துவத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.

கடந்த ஆண்டில், அமெரிக்காவும் இலங்கையும் கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு பதிலளிக்கவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து செயற்பட்டுள்ளன.

இலங்கையின் கொவிட்-19 தாக்கத்துக்கு எதிரான ஆதரவாக உயிர்காக்கும் தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்கியது.

நமது அரசாங்கங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்படும் போது, நமது நாடுகளிலும் உலகெங்கிலும் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் இணக்கமான உறவுகளை அதிகரிக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளங்கன் தெரிவித்துள்ளார்

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...