நாட்டின் 74 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை இஸ்லாமிய சமய விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக நீதியமைச்சர் அலிசப்ரி கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் முஸ்ஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் , ஜம்மிய்யதுல் உலமா சபையின் உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சியில் நாட்டின் சுபீட்சத்திற்காகவும், சமூகங்களின் ஒற்றுமைக்காகவும் உலமாக்களினால் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.