24 ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று அதிகாரப்பூா்வமாகத் ஆரம்பிக்கவுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஷி ஜின்பிங் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகியிருக்கும் நிலையில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், போட்டியாளா்கள் உள்பட ஒலிம்பிக்குடன் தொடா்புடைய அனைவருக்கும் அவ்வப்போது கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது