இரண்டாவது மரண பரிசோதனைக்காக மீள தோண்டி எடுக்கப்பட்ட ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
இரண்டாவது மரண பரிசோதனைக்காக அவரது சரீரம் கடந்த 27ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுடன் மரணித்த ஹிஷாலியின் மரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
ஹிஷாலியினின் சரீரரத்தை மீள தோண்டி இரண்டாவது மரண பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய இரண்டாவது மரண பரிசோதனைக்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட வைத்தியர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் பிரதானியாக கொழும்பு பல்கலைகழக வைத்திய பீடத்தின் நீதிமன்ற வைத்தியதுறை தொடர்பான பேராசிரியர் ஜின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த குழவினரால் கடந்த நாட்களில் பேராதனை வைத்தியசாலையில் மரண பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாவது மரண பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது சரீரம் இன்று பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.