இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை ஆட்டக்காரர்களான சமிக கருணாரத்ன மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா செல்லவிருந்த சாமிக்க கருணாரத்ன இதனால் வெளியேற முடியாமல் போனதாகவும், சுமார் 8 நாட்களில் அவுஸ்திரேலியா திரும்புவார் எனவும் அஷ்லி டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.