மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள 17 மாவட்டங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளுக்கு 25 சொகுசு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இந்த பஸ்கள் மகும்புரவில் இருந்து மொனராகலை, பதுளை, எம்பிலிப்பிட்டிய, அம்பாறை, அக்கரைப்பற்று, கண்டி, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல், மடோல்சிமா, வவுனியா, மட்டக்களப்பு, கதுருவெல மற்றும் கரடுகல ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும்.
மகும்புரவில் இருந்து காலி மற்றும் மாத்தறை வரையிலான பஸ் சேவைகள் இதுவரையில் இயங்கி வருவதாகவும், புதிய பஸ் சேவைகள் கொழும்பில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தணிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மகும்புரா பல்நோக்கு போக்குவரத்து மையம் இந்த நீண்ட தூர சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு வாகனதரிப்பிட வசதிகளையும் வழங்குகிறது.