யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழவை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு ஆலயத்திற்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே பக்தர்களுக்கு ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும் என யாழ்.மாநகரசபை முதல்வர் அறிவித்திருந்த நிலையில், ஆலயத்திற்கு வரும் பக்தர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா நாட்டின் அசாதாரண சுகாதார சூழ்நிலையை கருத்திற் கொண்டு, பக்தர்கள் வீட்டிலிருந்தவாறு முருகப்பெருமானின் கொடியேற்ற நிகழ்வினை தரிசனம் செய்யுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.