செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (26) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன இதனை நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணைகள் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.
