HomeTop news‘அக்வான்’ புயல் தீவிரமடையும் அபாயம் - கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

‘அக்வான்’ புயல் தீவிரமடையும் அபாயம் – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ (Akvan) சூறாவளி மேலும் தீவிரமடைந்து, நாளை (19) கடுமையான புயலாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இப்புயல் நாளை மறுதினம் (20) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரை ஊடாக கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது காற்றின் வேகம் மணிக்கு 60–70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.

இதேவேளை, ஊவா, தென் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுவதுடன், காலை வேளைகளில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று, வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular