HomeTop newsஓய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளர் உள்ளிட்ட இருவர் கைது

ஓய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளர் உள்ளிட்ட இருவர் கைது

ஓய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளரான சன்ன ஜயநாத் அல்விஸ் மற்றும் மாத்தறை மதுவரி நிலையத்தின் மதுவரி கோப்ரலான  சம்பத் ரணசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (5) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரித் திணைக்களத்தின் களுத்துறை மதுவரி அதிகாரி மற்றும் அளுத்கம மதுவரி உற்பத்தி தொடர்பான அதிகாரி ஆகிய பதவிகளில் பதில் கடமையாற்றிய காலத்தில், தனது மேற்பார்வையின் கீழ் இருந்த சட்டப்பூர்வ உரிமம் பெற்ற நிறுவனமொன்றிற்குச் சொந்தமான கணக்குகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட  காசோலைகளை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக ஓய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளரான சன்ன ஜயநாத் அல்விஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் அதே நிறுவனத்தின் களஞ்சியசாலையில் கடமையாற்றிய மதுவரி கோப்ரலான சம்பத் ரணசிங்க மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular