HomeTop newsபூட்டானில் பனி ஏரி உடைந்து பெருவெள்ளம்

பூட்டானில் பனி ஏரி உடைந்து பெருவெள்ளம்

வடமேற்கு பூட்டானின் காசா (Gasa) மாவட்டத்தில் இமயமலை பகுதியில் ஷிண்டபு என்ற பனி ஏரி அமைந்துள்ளது. பூட்டானில் உள்ள 17 ஆபத்தான பனி ஏரிகளில் இதுவும் ஒன்று.

பனி ஏரியில் ஒரு பகுதி உருகும்போதும் அதிலிருந்து நீர் அதிவேகமாக நீர் வெளியேறுவது பனி ஏரி உடைப்பு என அறியப்படுகிறது.

ஷிண்டபு பனி ஏரியில் இருந்து நேற்று மாலை பீறிட்டு வெளியேறிய நீர், மோ சூ நதி வழியாக தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்து வருகிறது.

இதனால் அங்கு காசா சாச்சு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகள் முன்கூட்டியே காலி செய்யப்பட்டதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அதேநேரம் அப்பகுதியில் சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசன அமைப்பு வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

மேலும் புனாகா காசா சாலையில் வெள்ளத்தால் ஏற்பட்ட குப்பைகள் புகுந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, பூட்டானில் உள்ள புனாகா நகரத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகாங் பகுதியை வெள்ள நீர் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ள நீரினால் இந்தியாவின் சங்கோஷ் நதியின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சங்கோஷ் நதியானது வடக்கு பூட்டானில் தோன்றி, இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக பாய்ந்து பிரம்மபுத்திரா நதியுடன் கலக்கிறது.

தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக பூட்டான் அதிகாரிகள் இந்தியாவை எச்சரித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதிகள், அலிபுர்துவார் மற்றும் ஜல்பகுரி மாவட்டங்கள் மற்றும் அசாமின் துப்ரி மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அங்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பிற ஆற்றங்கரைப் பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அசாமிலும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular