HomeTop newsஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம் - நவம்பர் 18 விசாரணைக்கு

ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம் – நவம்பர் 18 விசாரணைக்கு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையை அகற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா, மகேன் கொபல்லவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டன.

இதன்போது முன்வைக்கப்பட்ட காரணங்களைக் பரிசீலித்த பின்னர், நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

தீனியாவல பாலித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular