HomeTop newsவரவு செலவுத் திட்டம் மூலம் ஃபாம் எண்ணெய் இறக்குமதிக்கு வழிவகுக்க முயற்சியா?

வரவு செலவுத் திட்டம் மூலம் ஃபாம் எண்ணெய் இறக்குமதிக்கு வழிவகுக்க முயற்சியா?

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை திசைதிருப்பி, ஃபாம் எண்ணெய்யை (Palm oil) இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த முயற்சிகளை முறியடித்து நுகர்வோரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே மேலும் தெரிவிக்கையில்,

2021 ஆம் ஆண்டில் நிபுணர் குழுவொன்றினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்த நாட்டின் நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அல்லது உணவுப் பாதுகாப்பிற்காக ஃபாம் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட அரசாங்கமும் அந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் நிதி அமைச்சின் ஊழல் நிறைந்த அதிகாரிகள் சிலர் இணைந்து, இலங்கைக்கு ஃபாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவை முன்னிறுத்தி, அந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் இந்த நாட்டிற்கு மீண்டும் ஃபாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்க முற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular