சவூதி அரேபியா மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட விநியோக அபாயங்களை வர்த்தகர்கள் மதிப்பீடு செய்த அதேவேளையில், ரஷ்யாவிடமிருந்து மேலதிக டீசல் விநியோகம் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டதால், பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 2 அமெரிக்க டொலர் வரை உயர்ந்த கச்சா எண்ணெய் விலையானது இன்று (13) அதிகாலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 0.57% குறைந்து பீப்பாய்க்கு 106.04 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
அதேநேரம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WST) கச்சா எண்ணெய் விலை 0.5% குறைந்து பீப்பாய்க்கு 93.27 அமெரிக்க டொலராக விற்பனையாகின்றது.
செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த விலையாக, திங்கட்கிழமை பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 106.65 அஎன்ற விலையில் நிறைவடைந்தது.
உலகளாவிய சந்தைகளுக்குத் டீசல் வழங்க ரஷ்யா சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும் உக்ரைனுக்கு எதிரான போருக்கான வருவாயை மொஸ்கோ ஈட்டுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த ரஷ்ய எரிபொருள் மீதான அமெரிக்கத் தடையை அவரது நிர்வாகம் தற்காலிகமாக நீக்கியது.
மேலதிக விநியோகங்கள் உலகளாவிய எரிபொருள் சந்தைகளில் உள்ள பற்றாக்குறையைக் குறைக்கவும், சமீபத்தில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி வந்த விநியோகக் கவலைகளைத் தணிக்கவும் இது உதவக்கூடும்.
இருப்பினும், உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரும் வரை ரஷ்ய எரிபொருள் இறக்குமதியைத் தடை செய்யும் அமெரிக்கச் சட்டத்தை, ட்ரம்ப் – புட்டினுடன் செய்துகொண்ட இந்த ஒப்பந்தம் மீறுவதாகத் தோன்றுவதாக அமெரிக்காவில் இரு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
