follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1செயலிழந்த லக் விஜய மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

செயலிழந்த லக் விஜய மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

Published on

நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் மின் பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி செயலிழந்தது.

இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் தேவையான மின்சாரம் தொடர்பில் மதிப்பிடப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இந்த தேவையினை தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக அல்லது தனியார் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் பூர்த்தி செய்வது குறித்து இதன்போது தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...