follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1மீண்டும் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்

மீண்டும் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்

Published on

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் காணப்படும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. தரவுகளைப் பார்த்தால், நவம்பர் மாதம் முதல் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 65% நீர்மின்சாரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது.

ஆனால் இப்போது அது 25% ஆகக் குறைந்துள்ளதாகவும் எனவே மார்ச் தொடக்கத்தில் அல்லது பெப்ரவரி நடுப்பகுதியில் மின்வெட்டு இருக்கும் என்று தான் கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் மீண்டும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக அமைச்சார் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...