ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரிடம் சில மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். .
