கோதுமை மாவின் விலையை கிலோவுக்கு 17 ரூபாவால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பு இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, கோதுமை மாவின் புதிய விலை இன்று முதல் சந்தையில் அமுல்படுத்தப்படவுள்ளது.
விலை அதிகரிப்புக்கான காரணம் தொடர்பில் நிறுவனங்கள் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
