அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் இறுதி நேரத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிக்கு “டொலருக்கு டொலர்” என்ற அடிப்படையில் சமமான பதிலடி வரியை விதிக்க கனடா பிரதமர் மார்க் கார்னி தீர்மானித்துள்ளார்.
கனடா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில வாரங்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. இரு நாடுகளும் வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்யும் நிலைக்கு நெருங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்க தரப்பில் இறுதி நேரத்தில் முன்வைக்கப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றவை மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை என கனடா தெரிவித்துள்ளது.
இதையடுத்து பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தி, கனடாவின் பேச்சுவார்த்தைக் குழுவை ஒட்டாவாவுக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். கனேடிய தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு சமமான அளவில் பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
