HomeTop newsஇந்திய அணியின் பயிற்சிப் போட்டி நான்கு நாட்களில் இருந்து மூன்று நாட்களாக குறைப்பு

இந்திய அணியின் பயிற்சிப் போட்டி நான்கு நாட்களில் இருந்து மூன்று நாட்களாக குறைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பயிற்சிப் போட்டியின் கால அளவை நான்கு நாட்களில் இருந்து மூன்று நாட்களாக இலங்கை கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிப் போட்டி கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பயிற்சிப் போட்டியின் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular