மலேசிய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மகேந்திர பெரேரா வென்றுள்ளார்.
‘ரிவர்ஸ்டன்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பின்வருவோர் இடம்பெற்றிருந்தனர்:
ப்ரோக்கன் வாய்ஸஸ் (Broken Voices) திரைப்படத்திற்காக யுராய் லோய் (Yurai Loi)
லக்கி லூ (Lucky Lu) திரைப்படத்திற்காக சங் சென் (Chang Chen)
ரிவர்ஸ்டன் (Riverston) திரைப்படத்திற்காக ரந்திக குணதிலக்க
த ரெட் ஹேங்கர் (The Red Hanger) திரைப்படத்திற்காக நிக்கோலஸ் சராதே (Nicolas Zarate)
மகேந்திர பெரேரா சர்வதேச அளவில் விருதைப் பெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவிலும் அவர் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, ‘ரிவர்ஸ்டன்’ திரைப்படத்தில் நடித்த பிரியந்த சிறிகுமார சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
