மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 என்ற எல்லையை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆகும்.
இதேவேளை, இன்றைய தினம் (10) வரை பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வருடத்தில் கம்பஹா மாவட்டத்தில் 13,556 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 13,355 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,699 நோயாளர்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 4,425 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
