நெல் கொள்முதல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடு தழுவிய ரீதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரச கொள்முதல் நிலையங்கள் ஊடாக கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
