கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த இரு சாட்சிகளுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கான நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த இரு இந்திய சாட்சிகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட இந்த உத்தரவை இன்று (25) பிறப்பித்தார்.
இதனையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகளுக்காக சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேவையான சட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
