HomeTop newsஎல்பிட்டிய தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ பரவல்

எல்பிட்டிய தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ பரவல்

எல்பிட்டிய – மாபலகம பிரதான வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழற்சாலை ஒன்றில் இன்று திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ பரவலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular