HomeTop newsபௌத்த விவகாரம் குறித்து ஐ.தே.க விசேட அறிவிப்பு

பௌத்த விவகாரம் குறித்து ஐ.தே.க விசேட அறிவிப்பு

பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட நடைமுறை உள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, நாட்டின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்துடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் மூலம் பௌத்த சாசனத்தையும் மதத்தையும் பாதிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் நடைபெறுவதாகவும், இதில் சிவில் சமூகத்தின் சிலரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நிலையில் பௌத்த துறவிகள் மற்றும் பௌத்த மக்களின் கருத்துகள் ஓரங்கட்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular