‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய முன்கூட்டிய மாநாடு இன்று (29) நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து விசாரணைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி, குறித்த வழக்கு ஜூலை 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
