முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் ரூ. 7.8 மில்லியன் நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அப்போதைய சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத் தலைவர் பாஷ்வர குணரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் ரூமி ஜவ்ஃபர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என கோட்டை நீதிபதி பசன் அமரசேன இன்று (29) உத்தரவிட்டார்.
அரசு வழக்கறிஞரின் ஆலோசனைக்கு அமைவாக, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
