HomeTop newsபராக்கா அணுமின் நிலையம் மீதான ட்ரோன் தாக்குதல் - ஐநா பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

பராக்கா அணுமின் நிலையம் மீதான ட்ரோன் தாக்குதல் – ஐநா பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான கடுமையான மீறல் என பாதுகாப்பு சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான தரப்பு யார் என்பது குறித்து எந்தவொரு நாட்டையும் ஐ.நா. பாதுகாப்பு சபை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

கடந்த வாரம் ஈராக்கிலிருந்து ஆறு ட்ரோன்கள் தங்கள் நாட்டை நோக்கி ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருந்தது. அவற்றில் ஒன்று பராக்கா அணுமின் நிலையத்தை குறிவைத்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular