வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொறுத்தும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாடகை வாகனங்களுக்காக மீற்றர்களை கொள்வனவு செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு முன்னர் சந்தை செயற்பாடுகளின் பயன்பாட்டுக்கு பொறுத்தமானது என பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு மாதிரிகளுக்கான அனுமதி திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள வேண்டுமென அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.என். அகுரன்திலக தெரிவித்துள்ளாா்.
மாதிரிகளுக்கான அனுமதியை பெற்றுக்கொண்ட விற்பனை நிறுவனங்களுக்கு மாத்திரம் வாடகை வாகனங்களுக்காக மீற்றர்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதுடன் அவ்வாறு அனுமதி கிடைக்காத நிறுவனங்ளிடமிருந்து வாடகை வாகனங்களுக்கான மீற்றர்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்
மேலும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் வாடகை வாகனங்களுக்கான மீற்றர் பரிசோதனைக்காக நடமாடும் வாடகை வாகன மீற்றர் சேவை மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு அனுமதிப்பெற்ற வாடகை வாகனங்களுக்கான மீற்றர்களை அடையாளங் காணபதற்காக ஸ்டிக்கரை பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் நடமாடும் சேவை மத்திய நிலையத்தை அமைக்கவுள்ள இடங்கள் மற்றும் அந்த சேவையை நடைமுறைப்படுத்தும் திகதி ஆகிய விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த தினத்தில் பங்குப்பற்ற முடியாத வாடகை வாகன சாரதிகள் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட செயலக காரியாலங்களில் திங்கட் கிழமை இடம்பெறும் பொது மக்கள் தினத்தில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.