HomeUncategorizedஅதிவேக நெடுஞ்சாலை 3ஆம் கட்டம் - 7 பிரதான ஒப்பந்தப் பிரிவுகளுக்குப் பச்சைக்கொடி காட்டியது அரசாங்கம்

அதிவேக நெடுஞ்சாலை 3ஆம் கட்டம் – 7 பிரதான ஒப்பந்தப் பிரிவுகளுக்குப் பச்சைக்கொடி காட்டியது அரசாங்கம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3ஆம் பகுதியின் 2ஆம் கட்டமான றம்புக்கன முதல் கலகெதர வரை இடம்பெறும் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிலோமீட்டர் 131+800 முதல் 321+450 வரையிலான பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, தகுதியான உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.

இதன்படி, 2A, 2B, 2C மற்றும் 2F பக்கேஜ்களுக்கு 6 நிறுவனங்களும், 2Eக்கு 5 நிறுவனங்களும், 2Dக்கு 4 நிறுவனங்களும், 2Gக்கு 3 நிறுவனங்களும் விலைமனுக்கள் சமர்ப்பித்திருந்தன.

உயர்மட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி,

  • 2A பக்கேஜ் – 14.90 பில்லியன் ரூபாய்க்கு மாகா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிட்டெடுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2B பக்கேஜ் – 14.71 பில்லியன் ரூபாய்க்கு கே.டி.ஏ வீரசிங்க அண்ட் கம்பனி பிரைவேட் லிமிட்டெடுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2C பக்கேஜ் – 14.12 பில்லியன் ரூபாய்க்கு இன்டர்நெஷனல் கன்ஸ்ட்ரக்ஷன் கொன்சோர்டியம் பிரைவேட் லிமிட்டெடுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2D பக்கேஜ் – 16.39 பில்லியன் ரூபாய்க்கு நெம் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிட்டெடுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2E பக்கேஜ் – 18.70 பில்லியன் ரூபாய்க்கு அக்சஸ் இன்ஜினியரிங் பிஎல்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2F பக்கேஜ் – 14.52 பில்லியன் ரூபாய்க்கு எட்வெட் அண்ட் கிறிஸ்ட் பிரைவேட் லிமிட்டெடுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2G பக்கேஜ் – 19.10 பில்லியன் ரூபாய்க்கு மாகா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிட்டெடுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அரச நிதியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular