நாட்டில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளை உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.
நோய் நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன எலி காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என சமூக நல வைத்திய நிபுணர் அமில ஏரங்க சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
தற்போது, வயல் பகுதியிகளை அண்டி வசிப்பவர்கள் மாத்திரமன்றி நகர் பகுதிகளில் வசிப்பவர்களும் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.