follow the truth

follow the truth

November, 14, 2024
Homeஉலகம்புர்கினா பாசோ நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்!

புர்கினா பாசோ நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்!

Published on

நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், ஜனாதிபதி ரொச் கபோரேவை பதவியிலிருந்து அகற்றியுள்ளதாக மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவை  (Burkina Faso) இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புச் சீரழிவே இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற காரணமென அந்நாட்டு இராணுவ அதிகாரியொருவர் அரச தொலைக்காட்சியூடாக தெரிவித்தார்.

ஆயுதக்குழுக்களின் வன்செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக, பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி கபோரே பாரிய எதிர்ப்பை எதிர்கொண்டு வந்தார்.

இந்தநிலையிலேயே இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், ஜனாதிபதி எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தௌிவின்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வௌியிட்ட இராணுவ அதிகாரி கூறினார்.

புர்க்கினோ பாசோ தலைநகரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வௌிவந்து ஒரு தினத்தின் பின்னர் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘வெல்கம் பேக்’ வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்ட் டிரம்பை வரவேற்ற ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர்...

எரிமலை குமுறல் – பாலியில் விமான சேவைகள் இரத்து

எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் (32,808 அடி) உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா...

இன்னொரு முறை கை வைச்சு பாருங்க.. ஈரான் பொருளாதாரமே மொத்தமாக முடங்கும் – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல்...